ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் 40 பேர் காயம்

ஜெருசலேத்தை இஸ்ரேலிய தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவிற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்கு கரையில் உள்ள ரமல்லா நகரில் இஸ்ரேலிய காவல்துறையை சேர்ந்தவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய பாலஸ்தீனிய பிரஜை மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மேற்கு கரையில் மேலும் மூன்று பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஸா பள்ளத்தாக்கின் எல்iயில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை மேற்கு கரையில் சுமார் 2500 பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.அவர்கள் தீப்பந்தங்களையும் கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் எறிந்ததாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.

காஸா எல்லைக்கு அருகில் 3500ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற்
பி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரசல்ஸின் பிரக்சிற் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட
அமெரிக்க இறக்குமதி பொருட்கள் சிலவற்றிற்கு, துருக்கி இரட்டை வரி விதித்துள்ளது. குறிப்பாக கார்கள், மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதே

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*