இந்திய மீனவர்கள் 16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு இந்திய துணை தூதுவர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

இலங்கை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 16 பேர் இன்று ஊர்காவல் துறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சட்டமா அதிபரின் பணிப்பின் பெயரில் 16 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மற்றும் செப்ரெம்பர் மாதம் 12 திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்