பராமரிப்பின்றிக் காணப்படும் காணிகளை அரசுடைமையாக்க அனந்தி ஆலோசனை!

வடக்கு மாகா­ணத்­தில் பரா­ம­ரிப் பின்றியுள்ள மக்­க­ளின் காணி­களை அர­சு­ட­மை­யாக்க வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை­யின் மக­ளிர் விவ­கார அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு மாகாண சபை­யின் அடுத்­தாண்டு க்கான வரவு –செல­வுத்­திட்­டத்­தில் சுகா­தார அமைச்சு மீதான விவா­தம் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:
வடக்கு மாகா­ணத்­தில், மக்­க­ளின் காணி­கள் பல கவ­னிப்­பா­ரற்று எந்­த­வித பரா­ம­ரிப்­பும் இல்­லா­மல் காணப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான காணி­க­ளில்­தான் டெங்கு, மலே­ரியா நுளம்­பு­க­ளின் பெருக்­கம் காணப்­ப­டு­கின்­றது. எனவே அவற்றை பிர­தேச சபை­கள் கைய­கப்­ப­டுத்தி துப்பு­ரவு செய்ய வேண்­டும்.

மக்­கள் காணி­க­ளுக்கு உரிமை கோரி வந்­தால் பிர­தேச சபை­கள் தாம் செல­வ­ழித்த பணத்தை அற­விட வேண்­டும். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­கள் ஊடாக டெங்கு நுளம்­பு­களை ஓர­ளவு கட்­டுப்­ப­டுத்த முடி­யும். அத்­து­டன் வடக்கு மாகா­ணத்­தில் டெங்­குக் கட்­டுப்­பாட்­டுக்கு இரா­ணு­வத்­தி­னர், கடற்­ப­டை­யி­னர் ஆகி­யோரை பயன்­ப­டுத்து வதை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்த வேண்­டும்.

இன அழிப்­பில் ஈடு­பட்ட இரா­ணு­வத்­தைக் கொண்டு இவ்­வா­றான வேலை­களை செய்­வ­தன் ஊடாக இனப்­ப­டு­கொ­லை­களை மறைக்க முயற்சி செய்­கின்­ற­னர்.

வடக்­கில் ஏரா­ள­மான பெண் தலை மைத்­து­வக் குடும்­பங்­கள் வாழ்ந்து வரு­கின்­றன. இந்த நிலை­யில் இராணு வத்­தி­னர் பக­லில் வீடு­க­ளுக்கு டெங்­குக் கட்­டுப்­பாடு என்ற பெய­ரில் வந்து போவதால் குடும்­பப் பெண்­கள் இர­வில் மிகுந்த அச்­சத்­து­டன் வாழ வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மை­யில் தனி­யார் வைத்­தி­ய­சா­லை­யில் ஏற்­பட்ட தவ­றின் கார­ண­மாக பலர் தமது கண்­களை இழந்து விட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பி­லும் நீதி­யான விசா­ரணை இடம்­பெற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் – என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்