தனது வாரிசை தேர்தலில் இறக்கினார் மாவை!

உள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகன் போட்டியிட உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் போட்டியிடவுள்ளார். கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்வி கற்று வந்த கலையமுதன் தற்போது நாடு திரும்பியுள்ளார்.

வலி.வடக்கு பிரதேச சபையில் போட்டியிடுகின்றார். வலி.வடக்கு பிரதேச சபையில் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் முன்னாள் உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோரும் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிருகின்றமை உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலின் பின்னரேயே தவிசாளர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில் தேர்தலின் பின்னர் குறித்த சபைக்கான தவிசாளர் பதவிக்கு மாவை சேனாதிராஜாவின் மகன் பரிந்துரைக்கப்படும் நிலை ஏற்பட்டால் மீண்டும் கட்சிக்குள் குழப்பம் ஏற்படலாம் என்கின்றனர் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்கள்.

முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் மாவை சேனாதிராஜாவின் பிரத்தியேக செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை
பயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு
வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவரும் நிலையில் யார்? அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக

About சாதுரியன்

மறுமொழி இடவும்