வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு!

வெள்­ள­வத்தை பொலிஸ் பிரி­வுக்குட்பட்ட பகு­தி­க­ளில் பொது மக்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக தக­வல் பெறும் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தக­வல்­க­ளைப் பெற விண்ணப்­பப்­ப­டி­வங்­கள் விநி­யோ­கிக் கப்பட்டுள்­ள­தா­க­வும், தொடர்ந்து அந்த நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என­வும் வெள்­ள­வத்­தைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வெள்­ள­வத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் தொடர்­மாடி குடி­யி­ருப்புக்­க­ளில் வசிக்­கும் பொது­மக்­க­ளுக்கு பொலி­ஸா­ரால் வழங்­கப்­ப­டும் விண்­ணப்­பப்­ப­டி­வம் போர்க் காலத்­தில் வழங்­கப்­பட்ட விண்­ணப்­பப் படி­வங்­களை ஒத்­த­தாக உள்­ள­தா­க­வும், தக­வல்­கள் சேக­ரிக்­கப்­ப­டு­தல் தொடர்­பில் அச்­சம் ஏற்­ப­டு­வ­தா­க­வும் பொது மக்­கள் முன்­வைக்­கும் கருத்து தொடர்­பில் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­த­கர் கபில விஜே­மான்­ன­வி­டம் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தக­வல் சேக­ரிப்பு முறைமை வெள்­ள­வத்­தை­யில் மட்­டு­மன்றி நாட­ளா­விய ரீதி­யில் நடை­மு­றை­யில் உள்­ளது. நாம் வெளி­நாட்­டில் இருந்து வந்து இங்கு தங்­கி­யுள்­ள­வர்­கள், இங்கு நிரந்­த­ர­மாக தங்­கி­யுள்­ள­வர்­கள், தற்­கா­லி­க­மா­கத் தங்­கி­யுள்­ள­வர்­கள் என்று அனை­வ­ரது தக­வல்­க­ளை­யும் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே இந்த விண்­ணப்­பப் படி­வத்தை வழங்­கி­யுள்­ளோம்.

பல சந்­தர்ப்­பங்­க­ளில் வெளி­நாட்­டில் இருந்து வந்து இங்கு தங்­கி­யி­ருந்த பலர் குற்­றங்­களைப் புரிந்­து­விட்டுத் தப்­பிச் சென்­றுள்ள சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. இவை போன்ற விட­யங் க­ளில் இருந்து பொது மக்­களைக் காக்க வேண்­டிய கடப்­பாடு எமக்கு உள்­ளது.

பொது மக்­க­ளின் பாது­காப்­பையும் பாது­காப்­பான சூழ­லை­யும் உறுதி செய்­யவே இந்­தத் தக­வல்­கள் சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றன. பொது மக்­கள் தக­வல் சேக­ரிப்பு தொடர்­பில் வீண் அச்­சம் கொள்ளத் தேவை­யில்லை -– என்­றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்