வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது-டிடிவி தினகரன்

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது குறித்து டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். அதில் வெற்றிவேல் உணர்ச்சிவசப்பட்டு வீடியோவை வெளியிட்டுவிட்டதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.

டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டார். பெரும் புயலை கிளப்பிய இந்த வீடியோ குறித்து தற்போது டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

அவர் தனது பேட்டியில் “வெற்றிவேல் உணர்ச்சிவசப்பட்டு வீடியோ வெளியிட்டுவிட்டார். உறவினர்கள் வருத்தப்படுவதற்காக வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ” சசிகலாவுக்காக, அதிமுக கட்சிக்காக தியாகம் செய்தவர் வெற்றிவேல். அவர்மீது எளிதாக நடவடிக்கை எடுக்க முடியாது.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் தான் ஏன் வீடியோ வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதில் ”நைட்டியில் இருந்ததால் ஜெ. வீடியோவை வெளியிட விரும்பவில்லை. மக்கள் அவரை அப்படி பார்ப்பதை விரும்பவில்லை” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்