எதிர்கட்சி தலைவர் வைத்தியசாலையில்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுகயீனமுற்றிருந்த நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக அதிகமாக பணியாற்றியதாலேயே உடல் நலம் குன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் வைத்து எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சகயீனமுற்றதாகவும். மிகவும் கடினமான நிலையிலேயே கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரா.சம்பந்தன் தற்பொழுது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர் கட்சி தலைவர் இன்றைய தினம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் சுகயீனமுற்றமையினால் குறித்த பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்