வேட்பாளர் கடத்தப்பட்டமை தொடர்பில் அரசியல் பிரமுகர்கள் கண்டனம்!

புதுக்குடியிருப்பில் பெண் வேட்பாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக புளட் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவாகி வேட்பு மனுவில் கையெப்பம் இடச்சென்ற குடும்ப பெண்ணான பா.மஞ்சுளா கடந்த 20.12.17 அன்று மாலை அடியாட்களால் தாக்கப்பட்டு வீடு ஒன்றில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் 21.12.17 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸில் தனது குடும்ப பாதுகாப்பிற்காக முறைப்பாடு செய்துள்ளார் இவரது முறைப்பாட்டினை தொடர்ந்து இவர் மீது தாக்குதல் நடத்திய அடியாள் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள் இன்னிலையில் 21-12-17 அன்று குறித்த பெண் வீட்டிற்கு சென்ற வேளை மூன்று பெண்பிள்ளைகளின் தாயார் வீட்டில் கட்சி ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபருக்கு ஆதரவு தெரிவித்த பலர் வீட்டுப்பகுதியினை சுற்றிவளைத்து குறித்த வழக்கினை வாபஸ்வாங்க வற்புறுத்தியுள்ளார்கள் இதனால் பாதிக்கப்பட்ட பெண் வழக்கினை திரும்ப பெற முச்சக்கர வண்டியில் சென்ற வேளை மயக்கமடைந்துள்ளார்.

சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பெண்ணினை புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் 22-12-17 நண்பகல் பொலீஸாரால் தடுத்துவைக்கப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்தாமல் விடுவிடுவிப்பதற்காக கடிதம் ஒன்றில் ஒப்பம் வாங்கி சென்றுள்ளார்.

தனது மூன்று பிள்ளைகளுக்கும் தனக்கும் குறித்த நபரால் இனிவரும் காலங்களில் அச்சுறுத்தல் ஏதும் இருக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என பொலீஸாருக்கு தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்ட குறித்த பெண்ணினை வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார் இதனை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது.

மஞ்சுளா என்ற பெண் வேட்பாளர் எங்கள் கட்சியால் தெரிவு செய்யப்பட்டு வேட்பாளர் கைஒப்பத்தினை வைப்பதற்காக சிவமோகன் அவர்களின் அலுவலகத்திற்க அவரின் வேண்டுகோளினை ஏற்று அனுப்பிவைத்திருந்தோம் ஆனால் அவர் அங்கு சென்றபோது அவரின் வாசலில் இருந்து எனக்கு தொலைபேசி எடுத்திருந்தார் தன்னை அடிக்கவருவதாகவும் தன்னை கொழுத்தப்போவதாகவும் கூறுகிறார்கள் என்று தொலைபேசி தகவலை அடுத்து நான் சிவமோகன் அவர்களுக்கு தொலைபேசி எடுத்தேன் நான் பெண் வேட்பாளரை அனுப்பியுள்ளேன் உங்களுடன் இருப்பவர்கள் அல்லது வீட்டில் இருப்பவர்கள் பெண் வேட்பாளரை மிரட்டுகின்றார்கள் சென்று பாருங்கள் என்று சொன்னேன் அவர் சென்று பார்த்திருக்கின்றார் ஆனால் அந்த பெண் வேட்பாளர் அதன் பின்னர் கடத்தப்பட்டு மாலைவரை வைத்திருக்கின்றார்கள் அவரின் தகவலின் படி அவர் அவர் கட்டி வைக்கப்பட்டுள்ளார் இது ஒரு அப்பட்டமான தேர்தல் வன்முறை என்பதை நான் சுட்டிக்காட்டுகின்றேன் ஆனால் பொலீஸாரும் அவர்களை சார்ந்தவர்களும் இது ஒரு தேர்தல் வன்முறை என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதின் நோக்கம் என்ன இது விடயம் குறித்து எங்களுடைய கட்சியின் ஆணையாளரால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது இன்னிலையில் தற்போது இந்த வழக்கினை வாபஸ் பெறுமாறு மிரட்டப்படுகின்றார் மிரட்டப்படும்போது நேற்று 21 இரவு மயங்கி விழுந்து தற்போது மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்டப்பட்டுள்ளார் நான் அவரை சென்று பார்வையிட்டுள்ளேன் அவர் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றார் காரணம் அவர் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் தானக்கு ஆபத்து மிரட்டுகின்றார்கள் எதிர்காலத்தில் தான் எப்படி வாழ்வது என்று கூறி அழுகின்றார் இது ஒரு தேர்தல் வன்முறையின் ஊடாக இதனை விசாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்றும் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகன் அவர்களும் இன்று காலையில் மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்ட பெண்ணினை பார்வையிட்டுள்ளார் இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான வேட்பு மனுத்தாக்கலின்போது வேட்பாளாராக பெயர் குறிப்பிடப்பட்ட மஞ்சுளா அவர்களின் விடயம் மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன இன்னிலையில் மஞ்சுளா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை நான் பார்வையிட்டு கதைத்துள்ளேன் ஊடகங்களில் வந்த செய்திகளும் அவர் சொல்வது உண்மையாகவே இருந்தது இருந்தாலும் இதுவிடயமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கூறியதுடன் இந்த விடயம் கட்சியால் எடுக்கப்பட்ட முடிவல்ல தமிழரசு கட்சியினை தவறுதலாக எண்ணக்கூடாது உங்களுக்கு நடந்த பிரச்சனைகளை நாங்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளுக்கு நாங்கள் தெரிவிப்போம் என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தரசாஅவர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணினை மருத்துவமனை சென்று பார்வையிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் வேட்பு மனுவில் கையெழுத்து இடுவதற்காக மஞ்சுளா அவர்கள் சென்றபேது அவர் சில கும்பல்களால் மறிக்கப்பட்டு கடத்தப்பட்டு அடைத்துவைக்கப்பட்டுள்ளார்அதன் பின்னர் அவரை வேட்பு மனுதாக்கல் செய்யவிடாது மட்டுமல்ல அடைத்துவைக்கப்பட்ட இடத்திலே பெண்ணின் கண்கள் கட்டப்பட்டுள்ளது,வாய்க்குள் சீலைகள் திணிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார் அவர் தற்போது மாஞ்சோலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை நான் சென்று பார்வையிட்டுள்ளேன் அவர் என்னுடன் கலந்துரையாடிய பொழுது மிகவும் பயந்த சுபாவத்துடன் அவர் காணப்படுவதை என்னால் பார்க்க முடிந்தது அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றன அந்த பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு கூட அச்சுறுத்தி இருக்கின்றார்கள் இதனால் தன்னுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி அவர் மருத்துவமனையில் இருக்கின்ற பொழுது கூட கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த அடியாளினை விடுவிப்பதற்காக அவரிடம் கையெழுத்து வாங்கி சென்றுள்ளதாக அவர் எனக்கு தெரிவித்துள்ளார் இந்த விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றேன் தேர்தலில் 25 வீதம் பெண்களுக்கு வழங்கவேண்டும் என்கின்ற சட்டம் எழுத்தில் மட்டும் இல்லாமல் இங்கு அரசியல் என்பதற்கு அப்பால் பெண்ணுக்கு அநீதி நடைபெற்றுள்ளது

அரசியலில் வருவதற்காக தங்களை ஊக்கத்துடன் செயற்பட்ட பல பெண்கள் பின்வாங்குகின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கப்படவேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் இது தவிர்க்கப்படும் பட்சத்தில் பெண்கள் அரசியலில் வருவது என்பது வெறுமனவே எழுத்தில் சட்டத்தில் உருவானது ஒன்றாகத்தான் இருக்கும் ஆகவே இதனோடு சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நான் மிகவாக கேட்டுக்கொள்கின்றேன் இந்த பெண்ணுக்கு நீதி கிடைப்பதற்கும் ஏனைய பெண்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் வழங்குதற்கும் ஒத்துளைப்பு வழங்குமாறு மிகவும் தயவாக கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்த அவர் இன்று காலை இது தொடர்பில் நான் பாராளமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களிடமும் சுமந்திரன்அவர்களிடமும் தொலைபேசி மூலம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன் இந்தவிடயம் தொடர்பில் அவர்களுக்கு தெரியும் நிச்சயமாக இந்த பெண்ணுக்கு நீதிவழங்குவதற்கும் ஏனைய பெண்களுக்கும் இவ்வாறான அநீதி நடைபெறாமல் இருப்பதற்கு தாங்கள் உறுதிப்படுத்துகின்ற முறையில் இதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் எனக்கு தெரிவித்துள்ளார்கள் என்றும் சாந்திசிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்