ஐ.நா. அதிகாரிகளுக்கு மியன்மாரில் தடை!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை தங்கள் நாட்டிற்குள் நுழைய மியன்மார் அரசு தடை விதித்துள்ளது. குறித்த அதிகாரி ஒருதலைபட்சமாக உள்ளார், அவர் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தே மியன்மார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பௌத்த நாடான மியன்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் ரொஹிங்ய முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ளனர். கடந்ந சில வருடங்களாக ரொஹிங்யர்கள் இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

ரொஹிங்ய மக்களின் விடுதலையை வலியுறுத்தி கடந்த 2012ஆம் ஆண்டுமுதல் அங்கு ஆயுதக் குழுவொன்று போராடி வருகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ரொஹிங்ய ஆயுதக் குழு நடத்திய தாக்குதலில் 10 மியன்மார் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னரேயே ரொஹிங்யர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு பெரியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 6 லட்சம் ரொஹிங்யர்கள் பங்களாதேஷ்க்கு சென்று அங்கு தஞ்சடைந்துள்ளனர்.

மியன்மார் அரசு இனச்சுத்திகரிப்புச் செய்தது என்று அறிவித்தது ஐ.நா. சபை. ஐரோப்பிய நாடுகள் பலவும் மியன்மார் அரசுக்கு தமது கண்டனங்களைத் தெரிவித்தன.

தொடர்டர்புடைய செய்திகள்
அமெரிக்கா இராணுவம் மற்றும் சோமாலிய படையினர் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற்
பி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரசல்ஸின் பிரக்சிற் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*