வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்ட வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இரண்டு நாள் முன்பு டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆர்.கே நகர் தேர்தல் நேரத்தில் மக்கள் மனதை பாதிக்கும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது 126 (1பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டார்.

மேலும் ஜெயலலிதா மரணம் குறித்த செய்யும் விசாரணை ஆணையத்தின் செயலாளரான ஆறுமுகசாமி அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது புகார் அளித்து இருந்தார். அதேபோல் தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும் வெற்றிவேல் மீது புகார் பதியப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றிவேல் முன்ஜாமீன் தாக்கல் செய்து இருந்தார். இவரது ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிவில் வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்