மகிந்தவை கட்சியிலிருந்து நீக்க மைத்திரி திட்டம்!

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக- சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை மேற்கொண்டால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க எச்சரித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்ச இன்னமும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருக்கிறார். எனவே, உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறுவதற்கு அவர் பணியாற்ற வேண்டும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக- சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை மேற்கொண்டால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரேனும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளித்தால், அவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, கட்சியின் யாப்புக்கு அமைய, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அடையாளம் காணும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கட்சி யாப்பை மீறியமை, ஆதாரங்களுடன் அடையாளம் காணப்படுவர். இந்த திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காணப்பட்ட ஸ்ரீலங்கா ஐனாதிபதி மைதிரிபால சிறிசேனவின்
அதிபர் பதவியை விட்டு இன்று கூட விலகிச் செல்லத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது
சிறிலங்காவின் தேயிலை தமக்கு வேண்டாம் எனக் கூறி, அத்தேயிலை இறக்குமதிக்கு தடை விதித்த ரஷ்யாவின் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு சிறிலங்கா ஜனாதிபதி

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*