செல்பி படம் எடுக்க போய் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த இருவர் : புதுக்குடியிருப்பில் சோகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கள்ளியடி ஓயாவில் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் 7 நண்பர்களுடன் குறித்த பகுதியில் நீர்நிலையொன்றின் மத்தியில் நின்று செல்பி படம் எடுக்க முயற்சித்த போது அந்த இடத்தில் மணல் எடுத்ததால் ஏற்பட்டிருந்த குழிக்குள் சிக்கியுள்ளதாகவும் இதன்போது புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிவராஜா பகிதரன் மற்றும் தவம் கனிஷ்டன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் செல்பி படம் எடுக்கும் வேலையில் பின்பக்கமாக சென்ற நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்