இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை!

அம்பாறை, சுதுவெல்ல ஆற்றுக்கு அருகில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பாறை, சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இளைஞனின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்