இலங்கை அரசே என் தற்கொலைக்கு காரணம் : மனமுடைந்த பெண் கடிதம்

தமிழக முதல்வரை இழிவுபடுத்தி இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளத்தில் வெளியான கட்டுரையினால் மனமுடைந்த சேலத்து பெண்னொருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.தமிழக முதல்வரை இழிவுபடுத்தி இலங்கை பாதூப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டிருந்ததுடன்- இதற்கு எதிராக தமிழகத்தில் பெருமளவிலான எதிர்ப்பலைகளும் எழுந்தன.

இவ்வாறான நிலையில் சேலம் அ.தி.மு.க. மகளிர் அணி உறுப்பினர் ஒருவர் ஜெயலலிதா மீதான அவதூறு கட்டுரையினால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசியான விஜய லட்சுமியால் முதல்வர் ஜெயலலிதா மீதான அவதூறு கட்டுரையை பொறுத்து கொள்ள முடியாததினால் மனம் உடைந்த தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளார்.

அதன்படி அவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் 10 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு வீட்டில் உறங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் அவரது மகன் தாயாரை எழுப்பியபோது விஜயலட்சுமி மயங்கிய நிலையில் இப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன்- அவரை சேலம் அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அப்போது அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் விஜயலட்சுமி எழுதிய கடிதம் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்- மாண்புமி முதல்வர் அம்மா அவர்கள் தமிழகத்துக்கும் தாய்- எங்கள் குடும்பத்துக்கும் தாய். இந்தியா முழுவதும் அம்மாவை பெருமைப்படுத்தி பேசுகிறார்கள். ஆனால் இலங்கை அரசு மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களையும்- மோடி அவர்களையும் தவறாக சித்தரித்து இருக்கிறது.

இதற்கு இலங்கை அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்- இந்த பிரச்சினையால் நான் மனம் உடைந்து போய் விட்டேன். எனவே என் தற்கொலைக்கு காரணம் இலங்கை அரசு என்று அதில் எழுதியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த கட்டுரை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இருந்து அகற்றப்பட்டதுடன்- இலங்கை அரசு தமிழக முதல்வரிடமும்- மோடியிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Top