டிடிவி தினகரனை இலங்கை தமிழ் எம்.பி. சுமந்திரன் அண்மையில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் எம்.பி. சுமந்திரன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக தினகரனுடன் சுமந்திரன் எம்.பி. ஆலோசனை நடத்தினார். அப்போது ஈழத் தமிழர் நிலைமை தொடர்பாக தினகரன் கேட்டறிந்தார். இச்சந்திப்பின் போது எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.