கேப்பாபுலவில் 133 ஏக்கர் காணி இன்று மக்களிடம் கையளிப்பு

கேப்­பாப்பு­லவு மக்­க­ளுக்கு சொந்­த­மான 133 ஏக்கர் காணிகள் இன்று அவர்­க­ளி­டத்தில் மீளவும் கைய­ளிக்­கப்­படும் என்று சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் அறி­வித்­துள் ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பாது­காப்புக் கருதி இலங்கைத் தரைப்­ப­டையின் பாது­காப்புப் படைத் தலை­மை­ய­க­மொன்­றாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வந்த கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவின் கேப்­பா­பி­லவு கிரா­மத்தில் 133 ஏக்கர் காணிகளை விட்டு படைத் தலை­மை­ய­கத்தை இட­மாற்­று­வ­தற்கு அமைச்சின் ஊடாக 148 மில்­லியன் ரூபா இலங்கைத் தரைப்­ப­டைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்த அடிப்­ப­டையில், டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இக்­கா­ணி­களை அவற்றின் ஆரம்ப உரித்­தா­ளி­க­ளிடம் மீண்டும் கைய­ளிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பிர­தேச செய­லா­ள­ருக்கு அறி­விப்பு விடுக்­கப்­பட்­டள்­ளது. 290நாட்­க­ளுக்கு மேல் தொடர்ந்த உண்­ணா­வி­ர­தத்தைக் கைவிட்டு அம்­மக்­க­ளுக்கு தமக்குச் சொந்­த­மான கணி­களைப் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு தற்­போது உரு­வா­கின்­றது. 2018 ஆம் ஆண்டில் அக்­கா­ணி­களில் 85 குடும்­பங்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்கு அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்