மட்டக்களப்பில் விபத்து இளம் பெண் பலி!

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த காரானது வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த குறித்த பெண்ணுடன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 28 வயதான புவிராசா நிலாந்தினி என்ற இளம்பெண்ணாவார்.

குறித்த விபத்திற்கு காரணமான கார் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று
இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு "United States of India" என மதிமுக பொதுசெயலர் வைகோ
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்

About காண்டீபன்

மறுமொழி இடவும்