வவுனியா நகர் பகுதியில் விற்பனைநிலையங்கள் மூடப்பட்டு போராட்டம்!

வவுனியாவின் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா பழைய பஸ் தரிப்பிடத்தை மூடி, பஸ்கள் உள்ளே செல்ல முடியாத படி, பெரல்கள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வௌியிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பஸ் தரிப்பு நிலையம் மூடப்பட்டமையால், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

இதற்கமைய, 147 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக, வவுனியா வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாளை இந்த விடயம் தொடர்பில் வவுனியா முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிப்பது குறித்து இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அச் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கைக்குள் சீனா வருவதற்கு காரணம் இந்திய அரசின் தவறான அணுகுமுறையே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா
பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் செயற்பாட்டாளராக இருந்த தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை
யாழ்.வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9மணியளவில், ஊரிக்காடு

About இலக்கியன்

மறுமொழி இடவும்