பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே தகவல்கள் திரட்டப்பட்டன என்கிறார் இராணுவத் தளபதி

“வடக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து வதற்காகவே, வட மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் திரட்டப்படுகின்றன” என இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

“யுத்த காலத்தில், இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களைச் செய்யவில்லை. அதில், நான் உறுதியுடன் இருக்கின்றேன். சில சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அவை குறித்து விசாரணை செய்வதற்கும் பயப்பிட வேண்டியதில்லை” என்றும் அவர் குறிப்பி ட்டுள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் பிபிசி சிங்கள சேவைக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது

“இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 500 இராணுவ சிப்பாய்கள், பௌத்த விகாரைகள் உள்ளிட்ட சமய நிறுவனங்களில் கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நீண்டகால திட்டங்களில், இராணுவ சிப்பாய்கள் ஈடுபடுகின்றமை பிரச்சனைக்குரியது.

“இராணுவச் சிப்பாய்கள் தற்போது முன்னெடுத்துள்ள திட்டங்கள் நிறைவடைந்ததும் அவர்கள் மீண்டும் முழுமையாக இராணுவச் சேவைக்கு அழைக்கப்படுவதை நான் எதிர்பார்க்கின்றேன்.

“தனிப்பட்ட ரீதியில் என்னிடம் கேட்டால் அவ்வாறு அனுப்பாமல் விடுவது நல்லது. விகாரைகளில் நீண்டகாலம் தங்கியிருந்து சில வேலைகளில் ஈடுபடும் போது அங்கே சிறிய குழப்பம் ஒன்று காணப்படும். “சிப்பாய்களின் சிப்பாய்கள் நாம்” என்ற மனோநிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

“விகாரைகளில் இவ்வாறான பணிகளில் இராணுவ சிப்பாய்கள் ஈடுபடுவது பக்தர்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும்” என்றும் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான “மைக்ரோ” திட்டங்களுக்கு இராணுவத்தினரை ஈடுபடுத்துவதை விட “மெகா“ திட்டங்களுக்காக இராணுவத்தினரை ஈடுபடுத்துவது தனது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்த இராணுவத் தளபதி திருகோணமலை மாவட்டத்தின் 576 குளங்களை புனரமைப்பு செய்யும் பொறுப்பும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளமையை உதாரணம் காட்டினார்.

“அதேபோல் பெரிய விடயங்களை எம்மிடம் ஒப்படையுங்கள். நாம் இந்த நாட்டுக்குத் தேவையானதை நிறைவேற்றுவோம்” என்றும் அவர் தெரவித்துள்ளார்.

“இலங்கை இராணுவத்தினர் யுத்த காலத்தில் யுத்தக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அதில் உறுதியுடன் இருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தராது என தமிழ்தேசிய
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*