சுத்துமாத்து சுமந்திரனின் சுத்துமாத்து!

சுத்துமாத்து புகழ் சுமந்திரன் பருத்தித்துறையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் திருவாய் மலர்ந்து அருளிய அருள் உரையினை மக்களின் தெளிவிற்காக இங்கே பதிவிடுகிறேன்…. நீங்களே முடிவு செய்யுங்கள்…. முடிவு உங்கள் கையில்!

(முன் குறிப்பு : இதை படித்து முடித்துவிட்டு விசர் ஆசுபத்திரி பக்கம் போகும் நிலை ஏற்படின் அதற்கு நீங்களே பொறுப்பாளியாவீர்கள்…)இடைக்கால அறிக்கையில் எங்களுக்கு பூரண திருப்தியில்லை…இடைக்கால அறிக்கையளவிற்கு அரைவாசித் தூரம் கொண்டு வந்த அளவில் பூரண திருப்தி அடைகிறோம்….

பகிரப்படும் இறையாண்மை பறிக்கப்பட முடியாதென்ற அம்சம் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இடைக்கால அறிக்கையில் இருக்கின்றது….மத்தியிலும் மாகாணங்களிலும் ஆட்சி அதிகாரங்களை பிரயோகிக்கும் நிறுவனங்களைக் கொண்ட நாடு என்ற வர்னிப்பு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது….

நாடு பிரியாமல் இருப்பதற்கு அரசியல் சாசனத்திலே எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று ஒப்புதல் வழங்கியிருக்கின்றோம்…மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருக்க வேண்டும் என பின் இணைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்….பௌத்த மதத்திற்கு முதலிடம் என்ற ஸ்தானம் கொடுக்கப்பட வேண்டுமென்று பெரும்பாண்மையான மக்கள் விரும்பினால் அதற்கு இணங்க நாங்கள் தயார்….பேச்சுவார்த்தை மேசையில் விட்டுக்கொடுப்புகளை செய்துதான் ஆக வேண்டும்….

நாங்கள் தனி நாடு கேட்டனாங்கள்… அதை விட்டுவிட்டு ஒரே நாட்டிற்குள் வாழ்வதற்கு தாயர்… என்ற விட்டுக்கொடுப்பினை செய்துள்ளோம்… அதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் என்று நாங்கள் கேட்டிருக்கின்றோம்….நாங்கள் அடிப்படையான விடயங்கள் எதையும் விட்டுக்கொடுக்க வில்லை… அதற்கு ஆதாரம் இந்த இடைக்கால அறிக்கை….

அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் எல்லாமே இருக்கு….தமிழர்களின் இருப்பு நிலைக்க வேண்டுமாயின் அரசியலைமைப்பு முயற்சி பலிக்க வேண்டும்….அந்த முயற்சி பலிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது… தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஆதரவைக் கொண்டதாக காண்பிக்கப்பட வேண்டும்…

பெப்ரவரி-10 இற்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு குறைந்துவிட்டது அல்லது சரிந்துவிட்டது என்ற நிலை வந்துவிட்டால் அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது போய்விடும்…இந்த அளவிலேயே நிறைவேற்றப்படும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது….ஆனால் எங்களுடைய பக்கத்தில் இருந்து அது சரிந்ததாகவோ இயலாமல் போனதாகவோ இருக்கக்கூடாது….தெற்கில் உள்ள கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டால் அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமாகாமல் போகலாம்….

ஆனால் அதை குழப்பியவர்கள் நாங்களாக இருக்கக்கூடாது என்றால் அனைத்து சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைக்க வேண்டும்….இடைக்கால அறிக்கை தொடர்பாக எல்லா ஊடகங்கள் அப்பட்டமான பொய்யைதான் சொல்லிக்கொண்டிருக்கிறது….அரசியல்வாதிகளும் தங்களுடைய பதவிக்காக பொய்தான் சொல்லுறது… மக்கள் கைதட்ட வேண்டும்.. ஆதரிக்க வேண்டும்.. என்பதற்காக அப்படி செய்யிறது…. ஆனால் அரசியல்வாதிகளைவிட ஊடகங்கள் அதிகமாக பொய் சொல்லி வருகின்றது….இவ்வளவு தூரம் பொறுமையாக வாசித்தறிந்த நீங்கள் நிச்சயம் தெளிவான மனநிலையுடையவர் என்பது திண்ணம். அந்த வகையில் உங்கள் வாக்கும் சரியானவர்களுக்கே செலுத்துவீர்கள் என்பதை ஆணித்தரமாக நம்புகின்றோம்.

தமிழர்களின் உரிமையை நிலை நாட்டவா…?

தமிழர்களின் உரிமையை அடமானம் வைக்கவா…? எமது வாக்கு என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்!

ஈழதேசம் இணையம்!

தொடர்டர்புடைய செய்திகள்
மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால்
கடந்த அரசாங்கத்தினால் சில முக்கியஸ்தர்களிற்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உயிர்அச்சுறுத்தல்
“புதிய அரசமைப்புப் பணிகளின் முன்னகர்வதைத் தடுப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*