வவுனியாவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : பாடசாலை மாணவன் கைது!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய 17வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஈச்சங்குளம் பகுதியில் வசித்து வரும் 13வயதுடைய பாடசாலை மாணவியும் மல்லாவியை சேர்ந்த 17வயதுடைய சிறுவனும்
கடந்த ஒரு வருடங்களாக காதலித்துள்ளனர். பின்னர் நேற்றையதினம் குறித்த மாணவியின் வீட்டில் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக மாணவி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் சென்றுள்ளார்.

மாணவியின் பெற்றோர் மாலை வரை அவரை தேடியும் பிள்ளை கிடைக்காததனால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்படி சம்பவத்தினை தெரிவித்து முறைப்பாடொன்று மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஈச்சங்குளம் பொலிஸார் சிறுவனையும் மாணவியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது குறித்த பாடசாலை மாணவியை 17வயதுடைய சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுவன் இன்று (06.01) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்ட போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்