பளையில் இடம்பெற்றது வெடிவிபத்து!

கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பளை பகுதியை சேர்ந்த சிவமூர்த்தி சுரேந்திரன் (வயது 38) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர் மிதிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் எனவும் , அவர் வெடிபொருள் ஒன்றினை பிரித்து வெடி மருந்தினை அகற்ற முற்பட்டபோது குறித்த வெடிபொருள் வெடித்ததால் அவர் படுகாயமடைந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.

முன்னர் வெளியாகியிருந்த செய்தியில் குறித்த அசம்பாவிதம் துப்பாக்கிப் பிரயோகத்தின் மூலமே ஏற்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னாரில் நேற்று கிளைமோர் குண்டு ஒன்று வெடித்ததில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். வீடு ஒன்றில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டபோது
திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று வெடிபொருள் வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நால்வரும் திருகோணமலை
பளை – வேம்பொடு கேணிப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*