தயா மாஸ்டர் மீது யாழில் தாக்குதல்! (காணொளி)

யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிப நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கியதுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்டுள்ளார்.

சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைகளின் பின் வீடுதிரும்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள குறித்த தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் இன்று மாலை கத்தியுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த செய்திப் பிரிவுப் பணிப்பாளரை கதிரையால் தாக்கினார். அத்துடன் அவர் கொண்டுவந்த கத்தியை காட்டி ஊழியர்களையும் மிரட்டியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபரை குநித்த நிறுவனத்தின் ஊழியர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஈழப் போருக்காக தமிழக கலையுலகிலிருந்து முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்,
வவுனியா நகரசபையில் யார் ஆட்சியமைப்பதென்ற பேரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை நேற்று குறிப்பிட்டோம். இன்றுவரையான அதன் மேலதிக தகவல்களை குறிப்பிடுகிறோம். வவுனியா

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*