உக்கிரமடைகின்றது தமிழரசு அடாவடி!

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் ஏனைய தரப்பு வேட்பாளர்களை மிரட்டும் நடவடிக்கையில் தமிழரசுக்கட்சியினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு (சுரேஸ்,ஆனந்தசங்கரி அணி) கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதி வேட்பாளர் ஒருவரிற்கு தமிழரசுக்கட்சி இளைஞரணியினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.குறித்த வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியதாகவும் உடனடியாக தேர்தலில் இருந்து விலகுமாறு மிரட்டியதாகவும் தெரியவருகின்றது.
தாக்குதல் நடத்த வந்தவர்கள் தமிழரசு கட்சி வேட்பாளரிற்கு போட்டியாக எவரும் போட்டியிடக்கூடாதென தெரிவித்துள்ளனர். எனவே அவரை மீறி இங்கு யாரும் போட்டியிடமுடியாது என்பதால் விலகுமாறு மிரட்டியதாக அவ்வேட்பாளர் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
தாக்குதலாளிகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனே அனுப்பியதாகவும் தாக்குதல் நடாத்த வந்தவர்கள் தங்களை மிரட்டியவாறு தொலைபேசியெடுத்து சேர் நீங்கள் சொன்னமாதிரி வேலை நடந்துகொண்டிருக்கின்றது.அவர் கட்சி அலவலகம் திறப்பதற்கு விடவில்லை என பேசியதாகவும் சம்பந்தப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் வைக்க விடாது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அச்சுறுத்த இன்னொரு புறம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்படுவீர்களென தமிழரசு வேட்பாளர் மிரட்ட உள்ளுராட்சி தேர்தலில் ஏனைய கட்சிகள் திண்டாடிவருகின்றன.

முன்னர் அரச படைகளது ஆதரவுடன் ஈபிடிபி செய்ததை தற்போது தமிழரசு அரச அதிரடிப்படை பாதுகாப்புடன் கைகளில் எடுத்துள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கி பணிநீக்கம் செய்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து
ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என தமிழ்த்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*