சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் நன்றி தெரிவிப்பு!

பிணை முறிகள் தொடர்பான சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் இரா .சம்பந்தன் நன்றி தெரிவித்தார்.

சபை நடவடிக்கைகளை இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பித்து வைத்து எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.

இது அரசாங்கத்தின் நிதி தொடர்பான விடயமாகும். இதில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புண்டு. இது பொதுமக்களின் சொத்தாகும். இதில் பொதுமக்களுக்கும் உரிமையுண்டு என்று எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், பிணைமுறி தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பாக தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் தற்காலத்திலும், கடந்த காலங்களிலும் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, உண்மைத் தன்மையை வெளியிடுவது அவசியம் என்று வலியுறுத்தினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்