தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவான ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக் குழுவினருக்கும், கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில், “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயர், தமது கட்சியின் பெயரை ஒத்ததாக உள்ளது. ஆகவே இந்த பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதை ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு, இவர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற தமது கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில், ஆனந்த சங்கரி தலைமையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஒன்றிணைந்து “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயரில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
என்­னைக் காய்­வெட்டி என்­னு­டன் இணைந்த பங்­கா­ளி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி. “என்­னு­டன்
‘உடைகிறது உதயசூரியன்’, ‘கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று சில ஊடகங்களால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ரெலோ கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*