சீனாவின் நிதியுதவிகள் குறித்த அவுஸ்திரேலிய அமைச்சரின் கருத்தால் இராஜதந்திர நெருக்கடி

அவுஸ்திரேலிய அமைச்சர் ஓருவர் சீனாவின் கடனுதவிகள் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் காரணமாக இரு நாடுகளிற்கும் இராஜதந்திர நெருக்கடி உருவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் வெல்ஸ் சீனாவின் பசுபிக் பிராந்தியத்திற்கான நிதியுதவி குறித்து நேற்று விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.சீனாவின் பசுவிக்கிற்கான முதலீடுகள் பயனற்றவை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் சீனா தனது செல்வாக்கை அதிகரிப்பதற்காக சலுகையுடன் கூடிய கடன்களையும் நிதியுதவிகளையும் வழங்குகின்றது என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை அவுஸ்திரேலிய அமைச்சரின் இந்த கருத்துக்கள் பொறுப்பற்றவை என கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சீனா இந்த கருத்துக்கள் எந்த வித உண்மைகளை அடிப்படையாக கொண்டிராதவை எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவினால் வழங்கப்படும் பொருளாதார சமூக உதவிகள் பசுவிக் நாடுகளிற்கு குறிப்பிடத்தக்க அளவில் உதவியுள்ளன உள்ளுர் மக்களிற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கியுள்ளன இந்த உதவிகளை நாடுகளும் மக்களும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் சீனாவின் வெளிவிவகார பேச்சாளர் தெரிவித்துள்ளார்
அமைச்சரின் கருத்து தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்