சீனாவின் பக்கம் செல்லும் சிறீலங்கா-இந்திய இராணுவத்தளபதி எச்சரிக்கை!

சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடு அல்ல.

பாகிஸ்தான் எல்லையின் மீதுள்ள கவனத்தை இந்தியா சீனாவின் பக்கமும் திருப்ப வேண்டிய தேவை உள்ளது.

எமது அயல்நாடுகள் சீனாவை நோக்கி நகர்வதை அனுமதிக்கக் கூடாது. அயலவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையை இந்திய அரசாங்கம் காத்திரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

சீனாவைக் கையாளுவதற்கான பரந்துபட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, நோபாளம், பூட்டான், மியான்மார், சிறிலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை, இந்தியா தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு இந்தியா முழுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், முதல் மூன்று நாட்களுக்கான அமர்வுகளில் மாத்திரமே தாம் கலந்துகொள்ளவுள்ளதாக ஜெனிவாவிற்கான
வெள்­ள­வத்தை பொலிஸ் பிரி­வுக்குட்பட்ட பகு­தி­க­ளில் பொது மக்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக தக­வல் பெறும் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தக­வல்­க­ளைப் பெற
இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தும் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*