வவுனியாவில் கார் விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

வவுனியாவில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் 5 பேர் பயணித்தநிலையில் விபத்து இடம்பெற்றதையடுத்து அப்பகுதியில் இறந்த மற்றும் படுகாயமடைந்த இருவர்களைத் தவிர ஏனையோர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா மாவட்டம் மகாறம்பை குளம் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வீடொன்றிலிருந்து ஆணொருவரும், பெண்ணொருவரும் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய 17வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்
வடக்கு மாகாணத்தில் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு படை முகாம்களும் புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*