சுமந்திரனின் சகோதரர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரனின் சகோதரர் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் கரவெட்டிப் பிரதேச சபையில் போட்டியிடுகின்றதாக கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிகமும் நிகழ்வு யாழ் நகரிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற போது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலையே மேற்படி தகவலை அங்கஐன் வெளியிட்டார்.

இந் நிகழ்வில் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்க கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்ற சுமந்திரன் எம்.பியின் சகோதரரான கந்தையா வைத்தியநாதன் பெற்றுக்கொண்டடார்.இவர் சுமந்திரனின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்று சபையில அரசியல் பேசுவதற்கு அப்பால் உட்கட்டமைப்பு வசதிகைளiயே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு எம்மிடம் நிதி போதாது இருக்கின்றதால் மத்திய அரசிடமிருந்தே அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகையினாலஅங்கஐன் இராமநாதனின் கையைப் பலப்படுத்த வேண்டுமென்று அங்கு உரையாற்றிய கந்தையா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால் எமது சபைகளில் போதுமான நிதி இல்லாததால் உட்கட்டமைப்பை மேம்படுத்த முடியாத நிலை ஏற்படும். ஆகையினால் அங்கஐன் இராமநாதனுடன் சேர்ந்து மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அத்தனையையும் மேம்படுத்த முடியும். அவ்வாறு உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்பதற்காகவே நாங்கள் எல்லோரும் அவருடன் இணைந்துள்ளோம். அனவைருமாக இணைந்து அங்கஐனின் ஐகயைப் பலப்படுத்துவோமாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்று கந்தையா வைத்தியநாதன் மேலும் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்