முல்லைதீவில் சிறீலங்கா ஜனாதிபதி உருவப்படம் எரிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காணப்பட்ட ஸ்ரீலங்கா ஐனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை அடையாளம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்