தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டு அவரது கனவை ஒரேயடியாகக் காற்றில் பறக்கவிட்ட ஒரே ஒரு தனித்துவமான கட்சியே த.தே.கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டு அவரது கனவை கலைப்பதற்கென்றே தற்போது சில சதிகாரர்களால் முன்னெடுக்கப்படும் ஒரே ஒரு கட்சி என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கனவை உடைப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதனை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதாலேயே நாங்கள் அவற்றில் எம்மை இணைத்திருந்தோம் ! ஆனால் இன்று கூட்டமைப்பைதலைவரது கனவுக்குமாறாக சம்பந்தரும் அவருடன் சேர்ந்திருக்கும் சில சதிகாரர்களினாலும் சிங்கள அரசுக்கு விலை பேசப்பட்டு தமிழர்களின் அபிலாசைகள் அனைத்தும் மிதிக்கப்பட்டுவிட்டன!

இவற்றை மனதில் வைத்தே எதிர்வரும் தேர்தல்களில் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஒதுக்கி எந்தக் கட்சி தமிழ் தேசியத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றதோ அக் கட்சிக்கே தமது வாக்குகளை செலுத்தி அதனையே தமிழ் மக்கள் முதன்மைப் படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்