த.தே.கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மீதே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது.

நெல்லியடி பகுதியில் குறிப்பிட்டதொரு வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு ஆதரவாக அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை கிழித்தும் கழிவு எண்ணெய் பூசியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாம் தான் என்று தம்பட்டம் அடித்து வரும் கூட்டமைப்பினரின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைவடைந்து வருவதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.

ஏனைய கட்சிகளின் சார்பில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் காவல் துறையினராலும் மாற்று கட்சியினராலும் பொது மக்களாலும் கிழிக்கப்பட்டு வரும் நிலையில் கிழித்ததுடன் நிற்காது கழிவு எண்ணெயால் அபிசேகம் செய்துள்ளமை கூட்டமைப்பின் மீதான கடும் அதிருப்தியையே வெளிப்படுத்தியுள்ளது.

ஈழதேசம் இணையம்.

தொடர்டர்புடைய செய்திகள்
கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை
சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்

*