2 கோடி ரூபா” பணம் பெறப்பட்டமை மாவை ஒப்புதல்! சிறீதரன் மறுப்பு!

ஆளும் அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக அரசாங்கத்திடம் கூட்டமைப்பினர் பணம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்வைத்த குற்றச்சாட்டினை மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஆளும் அரசாங்கத்தினால் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கோடி ரூபா நிதி வழங்கப்பட்டதாக வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த நிதிப் பரிமாற்றம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தனால் நிரூபிக்கமுடியுமா? என்று பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார்.
இருந்தபோதிலும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசாங்கத்திடம் இருந்து நிதி கிடைத்தது உண்மையே என்று தெரிவித்த போதிலும் அதனை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவில்லை என்பதை ஒத்துக்கொண்டிருக்கின்றார்.

மாவை சேனாதிராஜா இவ்வாறு ஒப்புதல் வழங்கியுள்ள போதிலும் சிவஞானம் சிறீதரன் அவ்வாறு கிடைக்கவேயில்லை என்று தெரிவித்துள்ளமை அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது.

மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கென சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை போல சொந்தத் தேவைக்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதென குறிப்பிட்ட

மாவை, அதன் பிரகாரம் மாற்றுத்திறனாளிகள், வீட்டுத்திட்டம் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 16 முக்கிய திட்டங்கள் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சிவஞானம் சிறீதரன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து 2 கோடி ரூபா பணம்
வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்