சுமந்திரனை தொடர்ந்து சித்தார்த்தனிற்கும் பதவியாம்?

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னராக மைத்திரி –ரணில் அரசு அமைக்கும் புதிய அமைச்சரவையில் எம்.ஏ.சுமந்திரன் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் பின்னணியில் மேற்குலக நாடுகள் சில மும்முரமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா அமர்வு நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை குறைக்க சுமந்திரனிற்கு வழங்கப்படும் அமைச்சர் பதவி முக்கியத்துவத்தை தருமென இத்தரப்புக்கள் தமது ஆலோசனையினை தெரிவித்துள்ளன.

இதனிடையே புதிய வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பது தொடர்பில் ஜக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி ஆகிய இருபிரதான கட்சிகளும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.பிணைமுறி காரணமாகவும் உள்ளுராட்சி தேர்தல் காரணமாகவும் குடுமிப்பிடி சண்டையிலீடுபட்டிருக்கும் இக்கட்சிகள் இரண்டுமே சுமந்திரனின் நியமனம் தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவிக்காமை அந்நியமனம் தொடர்பில் தெற்கின் தேவையினை உணர்த்துவதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே சுமந்திரனின் அமைச்சு பொறுப்பேற்பின் தொடர்ச்சியாக பங்காளிக்கட்சிகளில் த.சித்தார்த்தனிற்கும் கனமான பதவியொன்று வழங்கப்படலாமென சொல்லப்படுகின்றது.
ஏற்கனவே செல்வம் அடைக்கலநாதனிற்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற பிரதிக்குழு தலைவர் பதவி மூலம் அவர் வாயை மூடிக்கொண்டது போன்று சித்தார்த்தனையும் வாய் அடைக்க வைக்கமுடியுமென இத்தரப்புக்கள் நம்புகின்றன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்