தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. இன்று 22ம் திங்கட்கிழமை பிற்பகல் 03 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழரசுக்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா வெளியிட்டு வைக்க புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா த.சித்தார்த்தன் ஆகியோருடன் ஈ.சரவணபவன், வடமாகாணசபை உறுப்பினர்களான அ.பரஞ்சோதி, பா.கஜதீபன், த.ஜெயசேகரம் ஆகியோரும் யாழ்.மாநகரசபை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தூய கரங்கள் தூய நகரம் எனும் தொனிப்பொருளில் களமிறங்க தமிழரசுக்கட்சியோ சுத்தமான பசுமை மாநகரம் எனும் தொனிப்பொருளில் தேர்தல் களம் குதித்துள்ளது.
முன்னணிக்கு போட்டியாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கவேண்டுமென அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் போன்றவர்கள் முனைப்பு காட்டியிருந்ததாக சொல்லப்படுகின்றது.

