குர்திஸ் அமைப்பிற்கான ஆதரவை அமெரிக்க கைவிடவேண்டும் என துருக்கி வேண்டுகோள்

குர்திஸ் ஆயுதக்குழுக்களிற்கான ஆதரவை அமெரிக்கா கைவிடவேண்டும் என துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
வடசிரியாவில் உள்ள குர்திஸ் பகுதிகளை இலக்குவைத்து தரைவழித்தாக்குதலை ஆரம்பித்தள்ள நிலையிலேயே துருக்கி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
அப்ரின் பிராந்தியத்திலிருந்து குர்திஸ் ஆயுதக்குழுக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள துருக்கி படைகளிற்கு எதிராக குர்திஸ் படையணிகள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதாக துருக்கி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் எல்லையில் பிகேகே அமைப்பு தனிநாடொன்றி;ற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதை அனுமதிக்க முடியாது என துருக்கி ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலின் போது துருக்கிபடையினர் சில கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனினும் குர்திஸ் தரப்பை சேர்ந்தவர்கள் இதனை நிராகரித்துள்ளனர்
இதேவேளை துருக்கி தனது நடவடிக்கையை ஆரம்பித்தபின்னர் இது வரை 70ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வடசிரியாவின் அப்ரின் பிராந்தியத்திலிருந்து குர்திஸ் ஆயுதக்குழுவான வைபிஜியையும் அதன் அரசியல் அமைப்பான பிவைடியையும் அகற்றுவதற்காகவே நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
குர்திஸ் தாயகத்திற்காக பல தசாப்தங்களாக போரிட்டுள்ள பீகேகே அமைப்பின் ஓரு பிரிவாக வைபிஜி அமைப்பை துருக்கி கருவதுவது குறிப்பிடத்தக்கது.
வைபிஜி அமைப்பு தன்னை சிரியாவின் வடபகுதியில் விஸ்தரித்துக்கொண்டுள்ளமை குறித்தும் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக அந்த அமைப்பு அமெரிக்காவுடன் இணைந்து கொண்டுள்ளமை குறித்தும் துருக்கி சீற்றமடைந்துள்ளது.
அமெரிக்கா வைபீஜி அமைப்பிற்கு ஆயுதங்களை பயிற்சிகளை வழங்கி வருவதையும் துருக்கி எதிர்த்து வருகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்