சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – மஹிந்த சமரசிங்க

உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நீதிபதிகள் பக்கச்சார்பாகவும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவுமே செயற்படுவர். இது இலங்கைக்கு சாதகமாக அமையாது.

மேலும் “எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எமது சார்பில் இந்தக் காரணிகளை நாம் உறுதியாக முன்வைக்க முடியும்

எமது நீதிமன்றம் மீதான சுயாதீனத்தை சுட்டிக்காட்டி உறுதியான விவாதத்தை முன்னெடுக்க முடியும். அதனை அரசாங்கமாக நாம் முன்னெடுப்போம். நேரடியாக எமது காரணிகளை நாம் தெரிவிப்போம். அத்துடன் இன்று நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நல்லிணக்க செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஆகவே இவை அனைத்துமே எமக்கு சாதகமாக அமைந்துள்ளது” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்