கோத்­தா – ரணில்­ உறவை அம்பலப் படுத்திய மைத்திரி

முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச கைது செய்­யப்­ப­டா­மைக்கு, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே கார­ணம் என்று அதி­ர­டி­யா­கத் தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. கோத்­த­பாயவைக் கைது­செய்­ய­வேண்­டாம் என்று தாம் எந்த உத்­த­ர­வை­யும் பிறப்­பிக்­க­வில்லை.

இவ்­வாறு தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

ஊட­கங்­க­ளின் ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பு அரச தலை­வர் அலுவலகத்தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­தா­வது-:

கோத்­த­பாய ராஜ­பக்­ச­வைக் கைது செய்­வ­தற்­குத் தேவை­யான ஆவ­ணங்­களை பொலிஸ்மா அதி­ப­ரி­டம் சட்­டமா அதி­பர் வழங்­கி­யி­ருந்­தார். அதைப் பொலிஸ்மா அதி­பர் என்­னி­டம் தெரி­வித்­தார்.

அப்­போது நான் தலைமை அமைச்சரைத் தொடர்பு கொண்­டேன். அவர் அப்­போது இந்­தி­யா­வில் இருந்­தார். சட்­டமா அதி­பர் செய்த பரிந்­து­ரை­களை மீளாய்­வு­செய்து உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று நான் அவ­ரைப் பணித்­தேன்.

இந்­தக் கோவை­களை சட்­டத்­த­ரணி ஒரு­வ­ருக்கு வழங்கி அதற்­கேற்ற வகை­யில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறே நான் சொன்­னேன். என்ன குற்­றச்­சாட்­டு­கள்? அவற்­றின் அடிப்­படை என்ன?

என்­ப­தைப் பார்க்­க ­வேண்­டு­மல்­லவா! ஆனால், அவர் அத­னைச் செய்­ய­வில்லை. அப்­ப­டியே மூடி வைத்­து­விட்­டார். இதில் என்­னைக் குற்­றம் சொல்­வ­தில் அர்த்­த­மில்லை’

About இலக்கியன்

மறுமொழி இடவும்