இடைக்கால அறிக்கையில் தமிழர்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு

புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியை அடிப்படையாக கொண்டே அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் வடக்கு 2ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி என்பதில் எந்தவிமான மாற்றமும் இல்லை என ஜனாதிபதியும், பிரமதரும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தெரிவித்துள்ளனர். ஒற்றையாட்சியானது மூன்று மொழிகளிலும் ஒற்றையாட்சியாகவே இருக்கும்.

ஆனால் சம்பந்தனும், சுமந்திரனும் கூறுகின்றனர் சிங்களத்தில்தான் எக்கராட்சிய தமிழில் ஒருமித்த நாடு ஒரு சிங்கள சொல்லுக்கு இதுவரையில் இருந்த தமிழ் மொழிபெயர்ப்பு ஒற்றையாட்சி என்பதாகும். ஆனால் இன்று மொழி பெயர்ப்பினை மாற்றுகின்றனர் ஒருமித்த நாடு என்று இது தனக்கு விளங்கவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
பொதுக் கொள்கை என்­ப­தன் ஊடாக ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா என்ன கூற வரு­கின்­றார் என்­பதை அவர் வெளிப்­ப­டை­யா­கக் கூற
மஹிந்த ராஐபக்‌ஷ தலமையிலான கட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர் தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்தேசிய
ஜனாதிபதி தான் பதவியில் இருக்க பொருத்தமானவரா என சிந்திக்க வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவருமான

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*