வாக்குச்சீட்டு மோசடி:சிறிதரன் எம்பியின் விசுவாசத்துக்குரிய பெண் வேட்பாளர் கைதான பரிதாபம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் விசுவாசத்துக்குரிய பெண் வேட்பாளர் ஒருவர் போலி வாக்குச்சீட்டு மோசடி தொடர்பில் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான கிருஸ்வேணி விக்ரர்லோகநாதன் ( விக்கரர்சாந்தி) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக வியாபார நிலையம் ஒன்றை அலுவலகமாக பயன்படுத்தியமை மற்றும் போலி மாதிரி வாக்கு சீட்டுக்களை வைத்திருந்தமை போன்ற காரணங்களால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார் .

அத்தோடு அவரிடம் இருந்த போலி வாக்குச் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வாக்குச் சீட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவின் கேடயச் சின்னத்திற்கு பதிலாக வெற்றிக் கிண்ணம் அச்சிடப்பட்டு மக்களிடம் விநியோகிப்பட்ட நிலையிலும் விநியோகிக்க தயாராக இருந்த நிலையிலும் ஒரு தொகை மாதிரி வாக்குச் சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தீவிர விசுவாசத்துக்குரியவராக செயற்பட்டுவருகின்ற குறித்த பெண்மணி கைது செய்யப்பட்டிருக்கின்றமை தமிழரசுக்கட்சியின் அறிவகத்தில் துயரத்தை ஏற்பட்டிருப்பதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்