இப்போதுமா சிறீதரன் சொல்கிறார்?சுரேஸ் கேள்வி!

தமிழ் மக்களின் நலன்களை பாராமல் அரசின் தேவைகளை பூர்த்தி செய்தமையால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதனை அதன் தலைவர் இரா.சம்பந்தர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு முதலில் வழங்கப்பட அதனை தொடர்ந்து சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் ரணிலை சந்தித்து தமக்கும் டெலோவிற்கும் பெற்றுள்ளனர்.இதன் பின்னரும் தான் வாங்கவில்லையென சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பாரெனில் உண்மையில் அவரது ஒதுக்கீட்டிற்கு என்ன நடந்ததென்பதை கண்டறிய வேண்டியிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று கல்வியங்காட்டில் தனது கட்சியின் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தி ற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அரசாங்கம் 2 கோடி ரூபா வழங்கப்பட்டது என கூட்டமை ப்பு நாடளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற த்தில் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் அப்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை. தற்போதைய குறித்த விடயம் ஊடகங்களில் வெளியானதை தொடந்து ஒவ்வொருவரும் அது பொய் என கூற ஆரம்பித்துள்ளனர்.
நாங்கள்; யாருக்கும் கை உயர்த்தியோ? அல் லது எமது மக்களுக்கு துரோகம் செய்தோ யாரிடமும் பணம் பெறவில்லை. எனது கோப்பாய் தொகுதியில் எனது மக்களுடைய தேவைகள் அடங்கிய கடிதம் ஒன்றை பிரதமரிடம் கொடுத்திருந்தேன். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி தருமாறு பிரதமருக்கு நெருக்குதல் கொடுத்திருந்தேன். அதனை தொடந்தே எனது திட்டங்களு க்கு 4 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டதென்பதையும் அவர் நினைவுபடுத்தியிருந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்