தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் எனச் சைகை காட்டியவரின் பணி பறிபோனது

லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் எனச் சைகை காட்டிய இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இன்றைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் உடனடி பணி நீக்கத்துக்குள்ளாகினார்.

கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் லண்டனில் உள்ள தூதரகத்தில் கொண்டாடப்பட்ட வேளையில் அப்பகுதியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தமிழர்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ சைகை காட்டியிருந்தார்.

அந்த விடயம் சமூக வலைதளங்களில் வைரலாகி இலங்கை அரசுக்கு கடும் அழுத்தத்தை தந்தது. இந்நிலையில் குறித்த இராணுவ அதிகாரி உடனடியாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்