ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில் இலங்கை!

நிதி முறைக்கேடுகள் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறும் நாடுகளை உள்ளடக்கிய கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பணச்சலவை மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறுவதாக குற்றம்சாட்;டப்பட்டு, இலங்கை, டியூனீசியா, ட்ரினேட் மற்றும் டொபாகோ குடியரசு ஆகிய நாடுகளை குறித்த கறுப்பு பட்டியலில் இணைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

அதற்கமைய இதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது, குறித்த பரிந்துரைக்கு ஆதரவாக 375 பேரும், எதிராக 283 பேரும் வாக்களித்துள்ளனர்.

அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி முறைக்கேடுகள் குறித்த கறுப்பு பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று
இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு "United States of India" என மதிமுக பொதுசெயலர் வைகோ
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்

About காண்டீபன்

மறுமொழி இடவும்