5 வாக்கிற்கு ஒரு சாராயப்போத்தல்: கூட்டமைப்பு அள்ளி வீசுகின்றது!

வடகிழக்கில் தேர்தல் வெற்றிக்காக கூட்டமைப்பு திணறிவருகின்ற நிலையில் தமிழக பாணியில் சாராய போத்தல்,கொத்துரொட்டியென தொண்டர்களை இணைக்கின்ற நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

ஐந்து வாக்குகள் திரட்டிதருபவர் ஒருவருக்கு ஒரு சாராயப்போத்தல் இலவசமென கிளிநொச்சியில் சிறீதரன் அணியும் யாழ்ப்பாணத்தில் சரவணபவன் அணியும் அறிவித்துள்ளது.அதேபோன்று முல்லைதீவில் சிவமோகனும் சாராயம்,கொத்துரொட்டி வேலைத்திட்டத்தில் குதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சில பகுதிகளில்; முன்னாள் கிராம சேவகர்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகளாக இத்தரகு வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களுக்கான பிரசாரம் நேற்று புதன் நள்ளிரவு 12 மணியுடன் நிறைவக்கு வந்த நிலையில் வாக்களிப்புத் தினம் வரையிலான அடுத்த 48 மணி நேரம் வரை கடுமையாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்துப் காவல்; நிலையங்களுக்கும் இலங்கை காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 48 மணி நேரத்தில் எந்த வகையிலும் எவ்வித பிரசாரங்களையும் முன்னெடுக்க முடியாது என்பதால் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுடன் அனைத்து விதமான பிரசாரங்களும் தடைச்செய்யப்படுகின்றன. வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்பதும் நேற்று இரவு 9 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது. எனவே அதன் பின்னர் உள்ள 48 மணிநேர மௌன காலத்தில் எவரேனும் பிரசாரங்கள் செய்வார்களாயின் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் இக்காலப்பகுதியில் வேட்பாளரின் வீட்டிலோ காரியாலயத்திலோ கூட விளம்பரங்களை காட்சிப்படுத்த முடியாது. அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்