ஜ.தே.கட்சியிடம் இருந்து மட்டுமே அழைப்பு.

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்தேசிய கூட் டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க ஜ. தே.கட்சி மட்டுமே பகிரங்க அழைப்பை விடுத்துள்ளது. வேறு எந்த கட்சிகளும் அழைப்பு விடுக்கவில்லை என தமிழரசு கட்சியி ன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலின் பின் தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் மாற்றங்களினால் ஜ.தே.கட்சி தனித்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப் பின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பியபோதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஜ.தே.கட்சியிடம் இருந்து மட்டுமே அழைப்பு வந்துள்ளது. மேலும் கூட்டாட்சிக்கான அழைப்பு வந்தால் அது தொடர்பாக பேசுவோம் என்றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்