எனக்கு செக் வைக்கவில்லை – சிவிகே

இன்றைய உதயன் நாளிதழில் தன்னைப் பற்றி வெளியான செய்தி போலிச் செய்தி என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். “போதிய தெளிவில்லாத நிலையில் கண்டபடி வாய் திறக்க வேண்டாம்- சிவஞானத்திற்கு செக்” என இன்று உதயன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இது தொடர்பில் இன்று தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே சிவஞானம் இதனை தெரிவித்தார். மேலும், நான் தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர்களில் ஒருவர். என்ன பேச வேண்டுமென்பது […]

வைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் சேர்ந்து ஈழ மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையைக் கண்டித்து, கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரசு அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்றுகுவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதையத் திமுக அரசு, அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. […]

ரவிகரன், சிவாஜியின் வழக்கு ஒத்திவைப்பு

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டதுடன், இனி மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்துக்குச் சென்று கையெழுத்திடத் தேவையில்லை என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரச சொத்துகளைச் சேதம் விளைவித்தக் குற்றச்சாட்டில், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், அவருக்கு எதிராக, […]

வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அவருக்கு, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் கைது

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் அம்பாறை – கல்முனையில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது […]

சுதந்திர கட்சியுடனான பரந்த கூட்டணிக்கு தடையில்லை – வாசுதேவ

ஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்காவிட்டாலும், பாரிய கூட்டணி அமைப்பதில் எந்த தடையும் ஏற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் ஜனாதிபதி அரசாங்கத்தில் அமைச்சுப்பொறுப்புக்களை வகிப்பதாலே அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மஹிந்த தலைமையிலான மொட்டு கட்சிக்கும் ஜனாதிபதி […]

மன்னாரில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு மன்னார் பிரதான பாலத்தில் வைத்து வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதி மீட்கப்பட்டது. உடுகம – ஜா எல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். சுமார் […]

கூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படுகிறது என்றும், இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அஜித்தின் நியாயமான முடிவை வரவேற்கிறேன் என்றும், பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் காரணம் என்பது பைத்தியக்காரத்தனம் என்றும் சீமான் கூறினார். முன்னதாக, வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையை கருத்துக்கணிப்பு மூலம் உருவாக்குகிறார்கள். மக்களவை தேர்தலில் […]

ஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி!

இலங்கையில் இனப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தும் , வடகிழக்கு போர்ச்சூழலால் பல இலட்ச்சக்கணக்கான தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரியும், உயிர்த்தஞ்சம் வேண்டியும் பல்வேறு புலம்பெயர் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருந்தார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் புலம்பெயர்ந்தது வாழ்ந்து வருவது யாவரும் அறிந்ததே. இதேநேரம் 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இது தற்போது வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் தற்போதைய காலத்தில் அங்கீகரிக்கக்கப்பட்ட அகதிகளை விட அங்கீகரிக்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்களை […]

இலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்?

இந்திய மீனவர்கள் இலங்கை கடற் படையினரின் தாக்குதலில் காயமடையவில்லையென அரசு ஆதரவு விசுவாசிகள் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர். அவ்வகையில் இலங்கை கடற்படையின் டோறா விசைப்படகுடன் மோதி ஏற்பட்ட விபத்தின்போதே எமது சக மீனவரான முன்னச்சாமி உயிரிழந்தார் என இலங்கை காவல்துறை கணக்கினை மாற்றியெழுதியுள்ளதாக தற்போது குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் இந்திய மீனவர்களை கைது செய்ய கடற்படையினரின் பாரிய படகினை சிறிய இந்திய மீனவர்களது படகின் அருகே அணைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.அந்த […]

ஸ்டாலினை கடுமையாக தாக்கிப்பேசிய டிடிவி தினகரன்

மு.க. ஸ்டாலின் ஒரு செல்லாத காசு என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் தோல்வி பயத்தால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தம்மை குற்றம்சாட்டி வருவதாக அவர் கூறியுள்ளார். தருமபுரி அருகே பாலக்கோட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பிவிடக் கோரி அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் இல்லாத […]

புலிகள் ஜனநாயகவாதிகள்:சீ.வீ.கே-கொலையாளிகள்:சுமந்திரன்!

விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்களென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று காலை வியாக்கியானம் செய்ய மாலை வேளையோ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விருப்பவில்லை, அதனால் தான் கட்சி தலைவர்களையும் கொலை செய்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியிருக்கிறார். மறுபுறம் அதேவேளை தமிழரசுக்கட்சியிலுள்ள அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானர்கள் […]