சுதந்திர கட்சியுடனான பரந்த கூட்டணிக்கு தடையில்லை – வாசுதேவ

ஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்காவிட்டாலும், பாரிய கூட்டணி அமைப்பதில் எந்த தடையும் ஏற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி அரசாங்கத்தில் அமைச்சுப்பொறுப்புக்களை வகிப்பதாலே அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மஹிந்த தலைமையிலான மொட்டு கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சிக்கும் இடையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்