சிவில் பாதுகாப்பு ஊழியர் கொலை!

முல்லைதீவில் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும்பெண்ணொருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்றையதினம் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை கத்தியால் கழுத்தில் வெட்டிக்கொன்றுள்ளார்.

குறித்த சம்பவத்தில் வெட்டிக் கொல்லப் பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய ஜெயா என்று அழைக்கப்படும் வி காந்தரூபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கணவன் தலைமறைவாகி உள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலீசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த சந்தேக நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்