நீ உலக மகா நடிகன்டா?

இலங்கையில் உலக மகா நடிகர்கள் இடத்தினை பெற கூட்டமைப்பினர் முதல் தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டிபோட்டுவருவது தெரிந்ததே.

கொலைகளினையும் காணாமால் போதல்களையும் தலைமை தாங்கி அரங்கேற்றிய டக்ளஸ் முதல் வரதராஜப்பெருமாள்,சித்தார்த்தன் வரை இப்போது மனித உரிமைகள் வாதிகளாகியுள்ள நிலையில் மறுபுறம் கூட்டமைப்பினரோ வெட்கமின்றி நடிகர்களாகியுள்ளனர்.

இலங்கையின் முப்படைகளிற்கும் முன்னுரிமை வழங்கி கொண்டுவரப்பட்ட வரவு செலவுதிட்டத்திற்கு கைதூக்கி ஆதரவளித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலன் அவர்களின் தாயாருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியதை பெருமையாக பகிர்ந்துள்ளார் சி.சிறீதரன்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் உலகமே வியந்த ஒப்பற்ற தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் தளபதியாக மேஜர் பசீலன் அவர்கள் இருந்தார் என அதில் கருத்தையும் தெரிவித்துள்ளார்.

மக்களது வாக்குகளை அறுவடை செய்ய புலி ஆதரவு வேசமும் மறுபுறம் புலிகள் எந்த சிங்கள இனவாத இராணுவத்தை எதிர்த்து போட்டியிட்டார்களோ அவர்களிற்கு முண்டுகொடுத்து வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களித்து விட்டு கொழும்பிலிருந்து நேரே உன்னதமான போராட்டத்திற்கு தனது மகனை ஒப்படைத்த தாயிற்கு அஞ்சலி செலுத்தி அதனை புகைப்படம் பிடித்து போடுவது தியாகங்களை கொச்சைப்படுத்துவதென தெரிவித்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்